இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு விசாகப்பட்டினத்தில் கடற்படை வீரர்கள் ஒத்திகை நிகழ்ச்சி


இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு விசாகப்பட்டினத்தில் கடற்படை வீரர்கள் ஒத்திகை நிகழ்ச்சி
x

இந்திய கடற்படை தினத்தை கொண்டாடுவதற்கு கடற்படை வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

ஐதராபாத்,

1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போரின் போது, டிசம்பர் 4 ஆம் தேதி அதிகாலை பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்குள் நுழைந்த இந்திய கடற்படையினர் அங்கிருந்த போர்கப்பல்களை தாக்கி அழித்தனர். இது 2-ம் உலகப் போருக்கு பின்னர் நடந்த மிகப் பெரிய கப்பற்படை தாக்குதல் ஆகும்.

'ஆபரேஷன் ட்ரைடென்ட்' என்று அழைக்கப்பட்ட இந்த தாக்குதலில் 3 ஏவுகணை படகுகளான ஐ.என்.எஸ். நிப்பட், ஐ.என்.எஸ். நிர்காட், ஐ.என்.எஸ். வீர் ஆகிய கப்பல்கள் கராச்சி துறைமுகத்துக்குள் சென்று எண்ணெய் கிடங்குகளை துவம்சம் செய்தது.

இந்திய கடற்படையின் இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 ஆம் தேதி 'இந்திய கடற்படை தினம்' கொண்டாடப்படுகிறது. இந்நாளில் 1971-ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் கொல்லப்பட்டவர்களும் நினைவுகூரப்படுகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய கடற்படை தினத்தை கொண்டாடுவதற்கு கடற்படை வீரர்கள் தயாராகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநிலம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்திய கடற்படை வீரர்கள் இன்று ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.


Next Story