விநாயகர் சதுர்த்தியையொட்டி பெங்களூருவில், இறைச்சி விற்க தடை
விநாயகர் சதுர்த்தியையொட்டி பெங்களூருவில், இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: நாடு முழுவதும் வருகிற 31-ந் தேதி(அதாவது நாளை மறுநாள்) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பெங்களூருவில் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக விநாயகர் சதுர்த்தி எளிமையாகவே கொண்டாடப்பட்டு வந்தது.
இந்த நிலையில், பெங்களூருவில் நாளை மறுநாள்(புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தியையொட்டி இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பெங்களூரு மாநகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இறைச்சி கடைகள் திறக்கவும், இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story