பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி கோலார் தங்கவயலில் பா.ஜனதா சார்பில் ரத்ததான முகாம்
பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி கோலார் தங்கவயலில் பா.ஜனதா சார்பில் ரத்ததான முகாம் நடத்தப்படும்.
கோலார் தங்கவயல்:
கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை ஜார்ஜ் மன்னர் அரங்கில் நேற்று பா.ஜனதா சார்பில் பிதரமர் ேமாடியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதைெயாட்டி அங்கு ரத்ததான முகாம் நடந்தது. இதில், கோலார் மாவட்ட பா.ஜனதா கட்சி துணைத் தலைவர் சுரேஷ் நாராயணன், பொது செயலாளர் விஜயகுமார், கோலார் தங்கவயல் தாலுகா தலைவர் கமலநாதன், முன்னாள் கவுன்சிலர் எட்வர்டு சிகாமணி உள்பட பலர் கலந்துகொாண்டனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.
இதையடுத்து ராபர்ட்சன்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு பழங்கள், பிஸ்கட் ஆகியவை வழங்கப்பட்டது. மேலும் கம்மசந்திரா கிராம பஞ்சாயத்து தலைவர் சுரேஷ் பாபு தலைமையில் ராபர்ட்சன்பேட்டை காந்தி சிலை எதிரே ஏழை-எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர், கோலார் தங்கவயலில் உள்ள அனாதை ஆசிரமங்களில் அன்னதானம் வினியோகம் செய்யப்பட்டது.