மைசூருவில் ஓணம் பண்டிைகை கொண்டாட்டம்


மைசூருவில் ஓணம் பண்டிைகை கொண்டாட்டம்
x
தினத்தந்தி 3 Sep 2023 6:45 PM GMT (Updated: 3 Sep 2023 6:46 PM GMT)

மைசூருவில் ஓணம் பண்டிைகை விஷேசமாக கொண்டாடப்பட்டது.

மைசூரு

மைசூரு மாவட்டத்தில் பல்வெறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். அதில் கேரள மக்களும் அடங்குவர். இந்தநிலையில் மைசூருவில் வசித்து வரும் கேரள மக்கள் மற்றும் கேரள சமாஜா சங்கம் சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இந்த பண்டிகை சாமுண்டி மலையின் அடிவாரத்தில் நடத்தப்பட்டது. இந்த பண்டிகையில் மைசூரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் லோகநாத், கேரள சமாஜ் சங்கத் தலைவர் மனுமேனன் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கோலங்கள் மீது குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மைசூரு நகரத்தை சேர்ந்த சில கன்னட சங்கங்களின் பிரமுகர்கள் பங்கேற்று இருந்தனர். நிகழ்ச்சியில் கேரள கலாசாரம், ஓணம் பண்டிகை விசேஷத்தை எடுத்துக் கூறும் வகையில் பல்வேறு வகையான வேடங்கள் அணிந்தும், நடனமாடியும் நிகழ்ச்சிகள் நடந்தது.

இதில் 25 வகையான தின்பண்டங்கள் தயாரித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிமாறப்பட்டது.


Next Story