ஒருநாள்..உங்கள் மனதை வெல்வோம்.. மோடி ஆதரவு கோஷம் எழுப்பியவர்களுக்கு கெஜ்ரிவால் பதில்..!


ஒருநாள்..உங்கள் மனதை வெல்வோம்.. மோடி ஆதரவு கோஷம் எழுப்பியவர்களுக்கு கெஜ்ரிவால் பதில்..!
x

கெஜ்ரிவால் பேசிய கூட்டத்தில் ‘மோடி, மோடி’ என கோஷங்களை எழுப்பினர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

ஆமதாபாத்,

குஜராத்தில் வருகிற 1 மற்றும் 5-ந்தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சமகால் மாவட்டத்தின் ஹலோலில் நேற்று பிரமாண்ட சாலை பேரணி நடத்தினார்.

பின்னர் அங்கு அவர் உரை நிகழ்த்தினார். அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் 'மோடி, மோடி' என கோஷங்களை எழுப்பினர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்த கெஜ்ரிவால், பின்னர் பேச்சை தொடர்ந்தார். அப்போது அவர் கூறுகையில், 'சில நண்பர்கள் மோடி, மோடி என கூச்சலிடுகிறார்கள். நீங்கள் விரும்பியவர்களுக்கு ஆதரவாக கோஷமிடுங்கள். ஆனால் இது கெஜ்ரிவால். நான் உங்கள் பிள்ளைகளுக்காக பள்ளிகள் உருவாக்குவேன். உங்களுக்கு இலவச மின்சாரம் தருவேன்' என கூறினார்.

மேலும் அவர், 'எங்களுக்கு யாருடனும் பகை இல்லை. நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவாக கோஷம் எழுப்பலாம். ஒரு நாள் உங்கள் மனதை வென்று உங்களை எங்கள் கட்சிக்கு அழைத்து வருவோம்' என்றும் தெரிவித்தார்.


Next Story