சிலிண்டர் மானியத் திட்டம் ஓராண்டு நீட்டிப்பு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்


சிலிண்டர் மானியத் திட்டம் ஓராண்டு நீட்டிப்பு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
x

கோப்புப்படம் 

மகளிர் தினத்தை ஒட்டி சிறப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக மந்திரி பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.

புதுடெல்லி,

பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தில் சிலிண்டர் பெறும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் ரூ.300 மானியத்தை ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.

சமையல் எரிவாயு திட்ட மானியத்துக்கு மத்திய அமைச்சரவை 12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகளுக்கு ரூ.603-க்கு மானியத்துடன் சிலிண்டர் கிடைக்கும். மகளிர் தினத்தை ஒட்டி சிறப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக மந்திரி பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.

1 More update

Next Story