தேசிய நியமன ஆணைய பணிகளுக்கு இனி ஆன்லைனில் தேர்வு - மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் தகவல்


தேசிய நியமன ஆணைய பணிகளுக்கு இனி ஆன்லைனில் தேர்வு - மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் தகவல்
x

தேசிய நியமன ஆணைய பணிகளுக்கு இனி ஆன்லைனில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற நல்லாட்சி நிர்வாகம் குறித்த மாநாட்டில் மத்திய அறிவியல்-தொழில்நுட்பம் மற்றும் மற்றும் பொது குறைதீர் துறை இணை மந்திரி ஜிதேந்திரசிங் கலந்து கொண்டு பேசியதாவது:-

"நாட்டில் மோடி பிரதமரான பிறகு கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சான்றிதழ்களின் உறுதி தன்மையை நிரூபிக்க உயர் அதிகாரிகளிடம் பிரமாண பத்திரம் பெற வேண்டும் என்று இருந்தது.

அதை பிரதமர் மோடி பதவி ஏற்று மூன்றே மாதத்தில் ரத்து செய்தார். அது ஒரு புரட்சிகரமான முடிவு ஆகும். அதே போல் அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு நடத்தப்படும் நேர்முக தேர்வும் ரத்து செய்யப்பட்டது.

தேசிய நியமன ஆணையத்தால் பல்வேறு பணிகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. அந்த தேர்வு இனிமேல் ஆன்லைன் மூலம் நடத்தப்படும். முதலில் இந்த தேர்வு 8 மொழிகளில் நடத்தப்படும். அதன்பிறகு அரசியல் சாசனத்தின் 8-வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளிலும் இந்த தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்."

இவ்வாறு ஜிதேந்திரசிங் பேசினார்.

1 More update

Next Story