மே மாதம் 29-ந் தேதி பள்ளிகள் திறப்பு


மே மாதம் 29-ந் தேதி பள்ளிகள் திறப்பு
x

கர்நாடகத்தில் கோடை விடுமுறை முடிந்து மே மாதம் 29-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

பெங்களூரு:-

கர்நாடக பள்ளி கல்வித்துறை 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளி திறப்பு மற்றும் விடுமுறை சம்பந்தப்பட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023-24-ம் கல்வி ஆண்டுக்காக மாநிலத்தில் உள்ள பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து மே மாதம் 29-ந் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 29-ந் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 7-ந் தேதி வரையும், அக்டோபர் மாதம் 25-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ந் தேதி வரையும் பள்ளிகள் நடைபெற உள்ளது. அதே நேரத்தில் அக்டோபர் 8-ந் தேதியில் இருந்து அக்டோபர் 24-ந் தேதி வரையும், கோடை காலமான வருகிற 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ந் தேதி முதல் மே மாதம் 28-ந் தேதி வரை விடுமுறை என்றும் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story