விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு 350 சிறப்பு பஸ்கள் இயக்கம்


விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு 350 சிறப்பு பஸ்கள் இயக்கம்
x

தமிழ்நாடு அரசு சார்பில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு இன்று சென்னையில் இருந்து 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக விநாயக சதுர்த்தியை முன்னிட்டு 350 சிறப்பு பேருந்துகள் 30/08/2022 அன்று சென்னையிலிருந்து அனைத்து இடங்களுக்கும் இயக்கப்பட உள்ளது.

பயணிகளின் வசதிக்காக தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பஸ்களில் முன்பதிவு செய்து தங்கள் ஊர்களுக்கு செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்படி சேவையை பயணிகள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story