மாநிலங்களவை அலுவல் ஆய்வு குழு கூட்டத்தை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்


மாநிலங்களவை அலுவல் ஆய்வு குழு கூட்டத்தை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்
x

கோப்புப்படம்

மாநிலங்களவை அலுவல் ஆய்வு குழு கூட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இரு அவைகளிலும் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் தினந்தோறும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் எந்த ஒரு முக்கியமான அலுவலும் நடத்த இயலாமல் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையின் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தை எதிர்க்கட்சி கூட்டணியான 'இந்தியா' புறக்கணித்தது.

மாநிலங்களவை அலுவல் ஆய்வு குழுவில் துணை ஜனாதிபதி உள்பட மொத்தம் உள்ள 11 உறுப்பினர்களில் 3 பேர் இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்கள் ஆவர். அவர்கள் ஜெய்ராம் ரமேஷ் (காங்கிரஸ்), மிசா பார்தி (ராஷ்ட்ரீய ஜனதா தளம்) மற்றும் டெரெக் ஓ பிரையன் (திரிணாமுல் காங்கிரஸ்). இவர்கள் 3 பேரும் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். அதேபோல் குழுவின் மற்றொரு உறுப்பினரான பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் எம்.பி. கேசவ் ராவும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.


Next Story