ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தி..? - ஒருமித்த கருத்து ஏற்பட்டதாக தகவல்


ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தி..? - ஒருமித்த கருத்து ஏற்பட்டதாக தகவல்
x

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தியை நிறுத்துவதற்கு ஒருமித்த கருத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், மேற்கு வங்காள முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தியை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாகவும், இதுதொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாகவும் நேற்று தகவல் வெளியானது.

இதுதொடர்பாக சில எதிர்க்கட்சி தலைவர்கள் கோபாலகிருஷ்ண காந்தியை தொலைபேசியில் தொடர்புகொண்டு வலியுறுத்தியதாகவும், அப்போது அவர் தனக்கு யோசிப்பதற்கு சிறிது காலஅவகாசம் வேண்டும் என்றும், இன்று (புதன்கிழமை) தனது முடிவை கூறுவதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அவருடன் பேசிய தலைவர்கள் தங்கள் கோரிக்கைக்கு அவரது பதில் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக கூறினர்.

77 வயதாகும் கோபாலகிருஷ்ண காந்தி, மகாத்மா காந்தி-ராஜாஜியின் பேரன் ஆவார்.

கடந்த 2017-ம் ஆண்டு துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட கோபாலகிருஷ்ண காந்தி, அப்போது வெங்கையா நாயுடுவிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story