நமது திறமை உலகின் வளர்ச்சி இயந்திரமாக மாறும் - பிரதமர் மோடி பேச்சு
நமது திறமை உலகின் வளர்ச்சி இயந்திரமாக மாறும் என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்தூர்,
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 17-வது வெளிநாடு வாழ் இந்திய தின விழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். இந்த மாநாடு மூன்று நாட்கள் நடைபெற இருக்கிறது.
விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இந்த உலகமே ஒரே நாடுதான். அனைத்து மக்களும் நம் சகோதரர்கள்தான். இது நம் முன்னோர்களால் கலாச்சார ரீதியில் வடிவமைக்கப்பட்டது. நாட்டு மக்கள் சார்பாக உங்களை வரவேற்கிறேன். இந்த மாநாடு நாட்டின் இதயம் என்று அழைக்கப்படும் நிலத்தில் நடைபெறுகிறது.
ஒவ்வொரு வெளிநாடு வாழ் இந்தியரும் இந்தியாவின் தூதர் என்றே அழைப்பேன். இந்தியாவின் தூதராக உங்கள் மாறுபட்டது. நீங்கள் மேக் இன் இந்தியாவின் தூதர்கள். இந்தியாவின் குறு,சிறூ தொழிகள், கைவினை பொருட்கள் ஆகியவற்றின் தூதர்கள்.
நமது திறமை உலகின் வளர்ச்சி இயந்திரமாக மாறும். இந்தியாவின் எதிர்காலத்தை நோக்கி உலக நாடுகள் ஆர்வமாக உள்ளன. உலக டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 40% இந்தியாவில் நடப்பதை கண்டு மற்ற நாடுகள் வியப்படைகின்றன. இந்தியாவின் முன்னேற்றம் பற்றி ஒவ்வோரு வெளிநாடு இந்தியர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பை ஆராய்ந்தால் இந்தியா எவ்வளவு வலிமையான மற்றும் திறமையான நாடு என்பது புரியும். இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் முன்னணியில் உள்ளது. இந்தியா உலகின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.