பொதுத்துறை நிறுவனங்களில் 2 லட்சம் வேலைகள் குறைப்பு - மத்திய அரசு மீது ராகுல்காந்தி சாடல்


பொதுத்துறை நிறுவனங்களில் 2 லட்சம் வேலைகள் குறைப்பு - மத்திய அரசு மீது ராகுல்காந்தி சாடல்
x

ஆண்டிற்கு 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்குவதாக பொய்யான வாக்குறுதி அளித்துவிட்டு மத்திய அரசு 2 லட்சம் வேலைகளை குறைத்துள்ளதாக ராகுல் குற்றஞ்சாட்டினார்

டெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தி வேலைவாய்ப்பு விவகாரத்தில் மத்திய பாஜக அரசை கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் பெருமையாக இருந்தன. ஆனால், தற்போது மத்திய அரசிற்கு பொதுத்துறை நிறுவனங்கள் முக்கியம் அல்ல.

ஆண்டிற்கு 2 கோடி வேலைவாய்ப்பை உருவாக்கித்தருவதாக போலியாக வாக்குறுதி அளித்தவர்கள் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு பதில் 2 லட்சத்திற்கும் அதிகமான வேலைகளை குறைத்துள்ளனர். 2014ம் ஆண்டு 16.90 லட்சமாக இருந்த பொதுத்துறை வேலைகள் 2022-ம் ஆண்டு 14.60 லட்சமாக குறைந்துள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில் வேலைவாய்ப்புகள் குறையுமா? பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 1 லட்சத்து 81 ஆயிரத்து 127 வேலைவாய்ப்புகள், செய்ல்நிறுவனத்தில் 61 ஆயிரத்து 928 வேலைவாய்ப்புகள், எம்டிஎன்எல் நிறுவனத்தில் 34 ஆயிரத்து 997 வேலைவாய்ப்புகள், எஸ்இசிஎல் நிறுவனத்தில் 29 ஆயிரத்து 140 வேலைவாய்ப்புகள், எப்சிஐ நிறுவனத்தில் 28 ஆயிரத்து 63 வேலைவாய்ப்புகள், ஒஎன்ஜிசி நிறுவனத்தில் 21 ஆயிரத்து 120 வேலைவாய்ப்புகள் இழந்துள்ளது.

தொழிலதிபர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து அரசு வேலைகள் நீக்கப்படுகிறது' என தெரிவித்துள்ளார்.


Next Story