கோவிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. பக்தர்கள் 13 பேர் பலி - ராமநவமியின் போது கோர சம்பவம்


கோவிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து..  பக்தர்கள் 13 பேர் பலி - ராமநவமியின் போது கோர சம்பவம்
x
தினத்தந்தி 30 March 2023 4:49 PM IST (Updated: 31 March 2023 7:29 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள கோவிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

போபால்,

மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் ராம நவமி கொண்டாட்டம் நடைபெற்றது.

பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் படிக்கிணற்றில் வழிபாடு நடத்திய போது படிக்கட்டுகள் எதிர்பாரத விதமாக திடீரென மளமளவென சரிந்து கீழே விழுந்தது.

படிக்கட்டுகளில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்ததனர். கிணற்றின் படிக்கட்டு இடிந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர்.

கிணறு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கியவர்களில் 19 பேரை உயிருடன் மீட்புபடையினர் மீட்டனர். ராம நவமியை முன்னிட்டு நடந்த சிறப்பு வழிபாட்டின் போது விபத்து நேரிட்டது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story