கர்நாடகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


கர்நாடகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
x

கொட்டித்தீர்த்த கனமழையால் பெங்களூரு புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமாக பெய்யத் தொடங்கியுள்ளது. நேற்று ஒருநாள் இரவில் கொட்டி தீர்த்த கனமழையால் பெங்களூரு நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. இரவில் மட்டும் 130 மி.மீட்டர் மழை பெய்ததே இந்த வெள்ள பாதிப்புக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

கர்நாடகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் வருகிற 10-ந் தேதி வரை மேலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று கர்நாடக அரசுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும். அதாவது கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, வட கர்நாடகத்தில் பாகல்கோட்டை, பெலகாவி, பீதர், தார்வார், கதக், ஹாவேரி, கலபுரகி, கொப்பல், ராய்ச்சூர், விஜயாப்புரா, யாதகிரி, தென்மாவட்டங்களில் பல்லாரி, பெங்களூரு புறநகர், பெங்களூரு நகர், சாம்ராஜ்நகர், சிக்பள்ளாப்புரா, சிக்கமகளூரு, சித்ரதுர்கா, தாவணகெரே, ஹாசன், குடகு, கோலார், மண்டியா, மைசூரு, ராமநகர், துமகூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும். லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story