பா.ஜனதா பிரமுகர் வீட்டில் திருட்டு


பா.ஜனதா பிரமுகர் வீட்டில் திருட்டு
x
தினத்தந்தி 26 Sep 2022 7:00 PM GMT (Updated: 26 Sep 2022 7:00 PM GMT)

சிக்கமகளூருவில் பா.ஜனதா பிரமுகர் வீட்டில் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கோணிபீடு அருகே உள்ள பெட்டதமனே கிராமத்தைச் சேர்ந்தவா் பிரசன்னா. பா.ஜனதா பிரமுகரான இவர் நேற்றுமுன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார்.

இதையறிந்து மர்மநபர்கள் சிலர் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீேராவை உடைத்து அதில் இருந்த தங்கம்-வெள்ளி பொருட்களை திருடி விட்டு தப்பி சென்றனர். இதையடுத்து வீட்டிற்கு வந்த பிரசன்னா கதவின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்துள்ளார். அதில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான தங்கம்-வெள்ளி பொருட்கள் திருட்டுபோய் இருந்தது. இதுகுறித்து அவர் கோணிபீடு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story