பாதயாத்திரை நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது - ராகுல் காந்தி


பாதயாத்திரை நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது - ராகுல் காந்தி
x
தினத்தந்தி 30 Jan 2023 1:50 AM GMT (Updated: 30 Jan 2023 4:14 AM GMT)

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரை நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று தேசிய கொடி ஏற்றிய ராகுல் காந்தி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் தெற்கில் இருந்து வடக்கு நோக்கிய பாதயாத்திரை நிறைவடைந்த நிலையில், மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிய யாத்திரை நடத்துவீர்களா? என செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் கூறியதாவது:-

இந்த யாத்திரை தற்போதுதான் முடிந்துள்ளது. எனவே இந்த கேள்விக்கு இப்போதே பதில் சொல்ல முடியாது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம். யாத்திரை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி சென்றது. ஆனால் அதன் விளைவு நாடு முழுவதும் இருந்தது. நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெற்ற பின்னரும் நிலைமை சீரடையவில்லை என குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, நிலைமை மிகவும் பாதுகாப்பாக இருந்தால், அமித்ஷா ஜம்முவில் இருந்து காஷ்மீர் வரை நடக்கட்டும் என்றும் தெரிவித்தார்.


Next Story