தமிழக பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது - ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்


தமிழக பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது - ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்
x
தினத்தந்தி 22 March 2023 1:51 PM GMT (Updated: 22 March 2023 1:57 PM GMT)

இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த தமிழக பாம்பு பிடி வீர்ரகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.

புதுடெல்லி,

இந்தியாவின் உயரிய விருதான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் குடியரசு தினத்தையொட்டி 106 பேருக்கு அறிவிக்கப்பட்டது. 6 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 9 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில், இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.


Next Story