சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எம்.அகமதி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்


சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி  ஏ.எம்.அகமதி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
x

சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எம்.அகமதியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்டின் முன்னாள் தலைமை நீதிபதி ஆஷிஸ் முசாபர் அகமதி உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 90. குஜராத் மாநிலம் சூரத்தில் 1932-ம் ஆண்டில் பிறந்த இவர், ஆமதாபாத் கோர்ட்டில் நீதிபதியாக 1964-ம் ஆண்டு பதவியேற்றார். குஜராத் மாநிலத்தின் சட்டத்துறை செயலராக செயல்பட்ட அகமதிக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவி 1988-ம் ஆண்டு வந்தது. 1994-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ஆனார். சுப்ரீம்கோர்ட்டு சட்ட உதவிக்குழு தலைவராகவும் இருந்துள்ளார். அலிகார் பல்கலைக்கழக வேந்தராகவும் இருந்துள்ளார்.

இந்தநிலையில் ஏ.எம்.அகமதி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,

இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி திரு.ஏ.எம்.அகமதி ஜியின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவர் ஒரு வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் திறம்பட பணியாற்றி உள்ளார். அவர் நமது நீதித்துறையை மேலும் திறம்படச் செய்வதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி... என பதிவிட்டுள்ளார்.


Next Story