இந்தியாவில் தாக்குதல் நடத்தவந்த பயங்கரவாதி மாரடைப்பால் மரணம்


இந்தியாவில் தாக்குதல் நடத்தவந்த பயங்கரவாதி மாரடைப்பால் மரணம்
x

Image courtesy: PTI

தினத்தந்தி 4 Sept 2022 1:55 PM IST (Updated: 4 Sept 2022 1:59 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்கான வந்து கைதான பாகிஸ்தான் பயங்கரவாதி மாரடைப்பால் உயிரிழந்தான்.

ஜம்மு,

ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷேரா செக்டர் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைப்பகுதி வழியாக ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுக் கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில், அவன் பாகிஸ்தானை சேர்ந்த தபாரக் உசேன் என்பது தெரியவந்தது. இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.

இந்தியாவில் நாசவேலை செய்வதற்காக பாகிஸ்தானை சேர்ந்த கர்னல் யூனுஸ் என்பவர் 30 ஆயிரம் ரூபாய் வழங்கியதாக தெரிவித்தான். இதே போல் மேலும் 5 பேர் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் வாக்குமூலம் அளித்திருந்தான்.

ஊடுருவ முயன்ற போது பாதுகாப்பு படையினர் சுட்டதில் காயடைந்த தபாரக் உசேன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். இந்த நிலையில், அவனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.


Next Story