நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ; ஜூலை 18-ல் தொடக்கம்?


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ; ஜூலை 18-ல் தொடக்கம்?
x

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதம் 18 முதல் ஆகஸ்ட் 12 ம் தேதி வரை நடைபெற உள்ளது என தகவல் வெளியானது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதம் 18 முதல் ஆகஸ்ட் 12 ம் தேதி வரை நடைபெற உள்ளது என தகவல் வெளியானது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கு ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகார அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது. 17 நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தின்போது ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

மேலும், நாடாளுமன்ற குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட 4 மசோதாக்கள் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகின. எனினும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.


Next Story