வீல் சேர் இல்லாததால் பயணி உயிரிழந்த விவகாரம்: ஏர் இந்தியாவுக்கு நோட்டீஸ்


வீல் சேர் இல்லாததால் பயணி உயிரிழந்த விவகாரம்:   ஏர் இந்தியாவுக்கு நோட்டீஸ்
x

மும்பை விமான நிலையத்தில் வீல் சேர் இல்லாததால் பயணி உயிரிழந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மும்பை,

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இருந்து பாபு பட்டேல் (வயது80) என்ற முதியவர், தனது மனைவி நர்மதா பென்னுடன் (76) மும்பை வந்தார். அவர் விமான டிக்கெட் எடுக்கும்போதே 2 வீல்சேருக்கும் முன்பதிவு செய்து இருந்தார். ஆனால் மும்பை வந்தவுடன் வீல்சேர் பற்றாக்குறை காரணமாக அவருக்கு வீல் சேர் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக மனைவியை மட்டும் வீல்சேரில் செல்லுமாறு கூறிவிட்டு, பாபு பட்டேல் நடந்தே சென்றார்.

அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். எனினும் அங்கு அவர் சிகிச்சை பலன்இன்றி உயிரிழந்தார். இந்தநிலையில் வீல்சேர் இல்லாததால் பயணி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரகம், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் சம்பவம் குறித்து விளக்கம் அளித்து 7 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு ஏர் இந்தியாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story