மெட்ரோ ரெயில் வழித்தடத்தின் நடுவில் பயணி ஒருவர் நின்றதால் பரபரப்பு! ரெயில் சேவை பாதிப்பு

மெட்ரோ ரெயில் வழித்தடத்தின் நடுவில் பயணி ஒருவர் நின்றதால் பரபரப்பு! ரெயில் சேவை பாதிப்பு
x

டெல்லி பட்கல்மோர் மெட்ரோ நிலையத்தில், ரெயில் தண்டவாளத்தில் ஒரு பயணி நின்றதால் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி பட்கல்மோர் மெட்ரோ நிலையத்தில், ரெயில் தண்டவாளத்தில் ஒரு பயணி நின்றதால் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷனின் (டிஎம்ஆர்சி) வயலட் லைன் எனப்படும் வழித்தடம் டெல்லியில் உள்ள காஷ்மீர் கேட் மற்றும் அரியானாவில் உள்ள ராஜா நகர் சிங் (பல்லாப்கர்) ஆகியவற்றை இணைக்கிறது.

சமீபத்தில் ஜூலை 4 அன்று, டெல்லி மெட்ரோவின் மஞ்சள் வழித்தடத்தில் உள்ள ஜோர்பாக் நிலையத்தில், ரெயிலின் முன் பாய்ந்து ஒரு பெண் இறந்தார். அதற்கு முன், ஜூன் 30 அன்று வயலட் லைனின் மூல்சந்த் மெட்ரோ நிலையத்தில், ரெயில் முன் குதித்த 50 வயது நபர் காயம் அடைந்தார்.

இந்நிலையில், படர்பூர் பார்டரில் இருந்து ராஜா நஹர் சிங் (பல்லாப்கர்) செல்லும் வழித்தடத்தில், பயணி ஒருவர் சென்றதால், பட்கால் மோரில் பாதையில் மெட்ரோ ரெயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மற்ற எல்லா மெட்ரோ ரெயில் வழித்தடங்களிலும் இயல்பான சேவை தொடருகிறது என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அந்த பயணி எதற்காக ரெயில் பாதையில் சென்றார் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. டெல்லி மெட்ரோவில் இதுபோன்று தொடர் விபத்துகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story