ஒடும் ரெயிலில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட பயணி - பரபரப்பு சம்பவம்
தற்கொலை செய்துகொண்ட நபரிடம் டிக்கெட், அடையாள அட்டை என எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
கவுகாத்தி,
அசாம் மாநிலம் கவுகாத்தில் இருந்து டெல்லி ஆனந்த் விகார் நோக்கி நார்த் இஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று சென்றுகொண்டிருந்தது. ரெயில் மேற்குவங்காளத்தின் நியூ ஜல்பைஹுரி அருகே வந்தபோது ரெயில் இருந்த பயணி தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டார்.
இதை கண்ட சக பயணிகள் அலறினர். இந்த சம்பவத்தில் துப்பாக்கியால் சுட்ட நபர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து, ரெயில் நியூ ஜல்பைஹூரி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த பயணி எந்த வித அடையாள அட்டையும் வைத்திருக்கவில்லை. மேலும், அந்த பயணி ரெயிலில் பயணிக்க டிக்கெட் எதுவும் எடுக்கவில்லை. இதனால், தற்கொலை செய்த பயணி யார் என்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
Related Tags :
Next Story