கேரளாவில் மருத்துவர்கள் மீது மீண்டும் தாக்குதல்; நோயாளி கைது
திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளி ஒருவர் இரண்டு மருத்துவர்களைத் தாக்கியுள்ளார்.
திருவனந்தபுரம்,
திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளி ஒருவர் இரண்டு மருத்துவர்களைத் தாக்கியுள்ளார்.இது தொடர்பாக நரம்பியல் மருத்துவர்களான இருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அந்த நோயாளி போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.விசாரனையில் அவர் திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பலராமபுரத்தைச் சேர்ந்த சுதீர் என தெரிய வந்துள்ளது.
கேரளாவில் மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் அவசர சட்டத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்புதான் கவர்னர் ஆரிப் முகம்மது கான் கையெழுத்திட்டு இருந்தார். இந்த நிலையில், அடுத்த சில தினங்களில் மருத்துவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடைபெற்று இருப்பது கேரளாவில் மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story