வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்யவேண்டும் என கூறியது ஏன்? இன்போசிஸ் நாராயண மூர்த்தி விளக்கம்


வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்யவேண்டும் என கூறியது ஏன்? இன்போசிஸ் நாராயண மூர்த்தி விளக்கம்
x

வாரத்திற்கு 70 மணி நேரம் உழைத்தால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் செல்லும் என்று நாராயண மூர்த்தி கூறியுள்ளார்.

மும்பை,

இளைஞர்கள் வாரத்துக்கு குறைந்தபட்சம் 70 மணி நேரம் பணி செய்ய வேண்டும். இதன் மூலம் நாட்டின் உற்பத்தி திறனை அதிகரிக்கலாம் என இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர், முன்னாள் சிஇஓ நாராயண மூர்த்தி கூறியதற்கு எதிர்ப்புகளும், விமர்சனங்களும் கிளம்பியதுடன் உலக அளவில் பேசுபொருளானது. இந்த நிலையில், தனது கருத்தை நியாயப்படுத்தும் வகையில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி மீண்டும் கூறியதவது:-

"யாராக இருந்தாலும் சரி, அவர்களது துறையில் என்னைவிட சிறப்பாக செயல்பட்டால் நான் அவர்களை மதிப்பேன். இந்த பகுத்தறிவுடன் நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது. மேற்கத்திய நாடுகளை சேர்ந்த எனது நண்பர்கள், என்ஆர்ஐக்கள், எந்த எதிர்பார்ப்பும் இல்லாத பலரும் 60 அல்லது 70 மணி நேரமாக இருந்தாலும் பிரச்னை இல்லாமல் தாங்கள் மகிழ்ச்சியாகவே இருப்பதாக தெரிவித்தார்கள்.

இந்திய நாட்டில் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும் என்பதையை இங்கு பார்க்க வேண்டும். ஏனென்றால் இங்கு ஏழை விவசாயியும் இங்கு கடினமாக உழைக்கிறார். ஒரு ஆலை தொழிலாளியும் கடினமாக உழைக்கிறார். அவர்களுக்காக நாமும் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். இதை செய்தால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story