பிரதமர் மோடியை 3-வது முறையாக பிரதமராக்க மக்கள் முடிவு: அமித்ஷா நம்பிக்கை


பிரதமர் மோடியை 3-வது முறையாக பிரதமராக்க மக்கள் முடிவு: அமித்ஷா நம்பிக்கை
x

லாலுபிரசாத் யாதவும் நிதிஷ் குமாரும் திருப்திபடுத்தும் அரசியலில் ஈடுபடுகின்றனர். இது பயங்கரவாதம் வளர்வதற்கு உதவுகிறது என்று அமித்ஷா பேசினார்.

பாட்னா,

உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா பீகார் மாநிலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள நவடா பகுதியில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அமித்ஷா கூறியதாவது:- வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற வேண்டும் என மக்கள் முடிவு செய்துள்ளனர். பிரதமர் மோடியை 3-வது முறையாக பிரதமர் ஆக்க வேண்டும் எனவும் நாட்டு மக்கள் முடிவு செய்து விட்டனர்.

காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ராமர் கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. லாலுபிரசாத் யாதவும் நிதிஷ் குமாரும் திருப்திபடுத்தும் அரசியலில் ஈடுபடுகின்றனர். இது பயங்கரவாதம் வளர்வதற்கு உதவுகிறது" என்றார்.


Next Story