இடுக்கி அணையில் நீர்மட்டம் உயர்வு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் - கேரள நீர்வளத்துறை மந்திரி அகஸ்டின்


இடுக்கி அணையில் நீர்மட்டம் உயர்வு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் - கேரள நீர்வளத்துறை மந்திரி அகஸ்டின்
x

கேரளாவில் உள்ள இடுக்கி அணையின் நீர்மட்டம் தற்போது 2,382.53 அடியாக உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பின. இதுவரை அங்கு 22 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள இடுக்கி அணையின் நீர்மட்டம் தற்போது 2,382.53 அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், பொதுமக்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை என கேரள நீர்வளத்துறை மந்திரி அகஸ்டின் தெரிவித்துள்ளார். மேலும் மழை தொடர்ந்தால், அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்து எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


Next Story