பா.ஜனதா ஆட்சியை ஒழித்துவிட்டு காங்கிரஸ் ஆட்சிக்கு மக்கள் ஆதவு அளிக்கவேண்டும்


பா.ஜனதா ஆட்சியை ஒழித்துவிட்டு காங்கிரஸ் ஆட்சிக்கு மக்கள் ஆதவு அளிக்கவேண்டும்
x

பா.ஜனதா ஆட்சியை ஒழித்து கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க மக்கள் ஆதரவு தரவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.

கோலார் தங்கவயல்:-

கட்சியின் மக்கள் குரல் நிகழ்ச்சி

கோலார் மாவட்டத்தில் நேற்று மக்கள் குரல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கோலார், மாலூர், சீனிவாஸ்பூர், முல்பாகல் பங்காருபேட்டை ஆகிய தொகுதிகளில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கோலார் தங்கவயலில் ராபர்ட்சன்பேட்டை நகரசபை மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்-மந்திரி பரமேஷ்வர், முன்னாள் மத்திய மந்திரி கே.எச்.முனியப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் டி.கே.சிவக்குமார் பேசுகையில்;-

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியின்போது பல்வேறு நல திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர் மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. இன்று கோலார் மாவட்டத்தில் குருடு மலை வினாயகர் கோவிலில் பிரசாரத்தை துவக்கி உள்ளோம். 5 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய பிரசாரத்தை போல் தற்போது தொடங்கியிருப்பதால் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

மாநில மக்களுக்கு இவலச சலுகைகள்

கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் 40 சதவீத கமிஷன் அரசை வீழ்த்துவதே காங்கிரசின் குறிக்கோள். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும். மேலும் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவமாக வழங்கப்படும். அத்துடன் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வினியோகிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் தலா 10 கிலோ அரசி நிரந்தரமாக வினியோகிக்கப்படும். வழக்கமாக எஸ்.சி.எஸ்.டி. மாணவ மாணவிகளுக்கு கிடைக்கவேண்டிய கல்வித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு காங்கிரசிற்கு மக்கள் ஆதவு அளிக்கவேண்டும். பா.ஜனதா ஆட்சியை வீழ்த்தவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story