பி.ஜி.எம்.எல். ஆஸ்பத்திரியை மீண்டும் திறக்க வேண்டும்; மத்திய, மாநில அரசுகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை


பி.ஜி.எம்.எல். ஆஸ்பத்திரியை மீண்டும் திறக்க வேண்டும்; மத்திய, மாநில அரசுகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை
x

பி.ஜி.எம்.எல்.ஏ. ஆஸ்பத்திரியை மீண்டும் திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோலார் தங்கவயல்

பி.ஜி.எம்.எல்.ஏ. ஆஸ்பத்திரியை மீண்டும் திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பி.ஜி.எம்.எல். ஆஸ்பத்திரி

ஆங்கிலேயர்கள் கடந்த 1880-ம் ஆண்டு முதல் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலில், தங்கச்சுரங்கத்தை நடத்த தொடங்கினர். அப்போது சுரங்க தொழிலாளிகளுக்காக ஆஸ்பத்திரி ஒன்றை கட்டினர். அந்த ஆஸ்பத்திரியில் அப்போதே பல நவீன மருத்துவ வசதிகளை அமைத்து இருந்தனர். அந்த ஆஸ்பத்திரிக்கு தங்கச்சுரங்க ஆஸ்பத்திரி என்றும் பெயரிடப்பட்டது.

சுதந்திரத்திற்கு பின்னர் அந்த ஆஸ்பத்திரி பி.ஜி.எம்.எல். ஆஸ்பத்திரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சுதந்திரத்திற்கு பின்னரும் அந்த ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகளாக ஆங்கிலேயர்கள் பணியாற்றி வந்தனர். மேலும் இந்திய டாக்டர்களும் அதில் பணிபுரிந்து வந்தனர். இந்த ஆஸ்பத்திரியை தவிர மைசூரு மைன்ஸ் பகுதியில் மகப்பேரு ஆஸ்பத்திரியும், சாம்பியன் பகுதியில் ஒரு மகப்பேறு ஆஸ்பத்திரியும், கோரமண்டல் பகுதியில் ஒரு ஆஸ்பத்திரியும் செயல்பட்டு வந்தன.

அலங்கோலமாக காட்சி அளிக்கிறது

பி.ஜி.எம்.எல். ஆஸ்பத்தியில் மகப்பேறு பிரிவு உள்பட அனைத்து நோய்களுக்கான பிரிவுகளும் செயல்பட்டு வந்தன. ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு தரமான உணவு, பால், ரொட்டி, பழங்கள், இறைச்சி-காய்கறி சூப் ஆகியவையும் கொடுக்கப்பட்டு வந்தன. நோயாளிகள் குளிக்க வெந்நீர் வசதியும் இருந்தது. இந்த ஆஸ்பத்திரியில் உள்ள ஒவ்வொரு உபகரணங்களும் இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டவை ஆகும்.

சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்டு வந்த பி.ஜி.எம்.எல். ஆஸ்பத்திரி தங்கச் சுரங்கம் மூடி 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆனதால் பராமரிப்பு இன்றி முட்புதர்கள் நிறைந்து அலங்கோலமாக காட்சி அளிக்கிறது.

பொதுமக்கள் கோரிக்கை

கொரோனா முதலாவது மற்றும் இரண்டாவது அலை பாதிப்பின்போது, இந்த ஆஸ்பத்திரி மீண்டும் திறக்கப்பட்டு சில வார்டுகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் அந்த ஆஸ்பத்திரி மூடப்பட்டது. இந்த ஆஸ்பத்திரியை மத்திய அரசு அனுமதியுடன் குத்தகைக்கு எடுத்து புதுப்பித்து மீண்டும் நடத்த சிலர் முயன்றனர்.

ஆனால் மத்திய அரசு அனுமதிக்கவில்லை. இந்த ஆஸ்பத்திரியை மீண்டும் திறந்து புதுப்பித்து வறுமையில் உள்ள மக்களுக்கு சிகிச்சை அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story