இடஒதுக்கீடு முறைய ரத்து செய்ய கோரி மாணவி மனு தாக்கல் - விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
இடஒதுக்கீடு முறைய ரத்து செய்ய கோரி மாணவி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.
புதுடெல்லி,
நாட்டின் இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய உத்தரவிட கோரி இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், இந்த மனுவை இன்று பரிசீலனை செய்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், விளம்பர நோக்கில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன், மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்து, திரும்ப பெற அனுமதியளித்து, மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும் பொதுநல மனுவை திரும்ப பெறாவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் எனவும் மனுதாரருக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story