இலவச திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய மனு: விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


இலவச திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய மனு: விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

இலவச திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய மனுவினை 3 நீதிபதிகள் அமர்வு விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

இலவச திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரி அஸ்வினி குமார் உபாத்யாய் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது மனுதாரர் அஸ்வினிகுமார் உபாத்யாய் ஆஜராகி, 'மாதிரி தேர்தல் அறிக்கையை உருவாக்க குழு அமைக்க வேண்டும். இலவச அறிவிப்புகளை முறைப்படுத்த தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் நிபுணர் குழுவை அமைக்க முன்மொழிகிறோம்' என வாதிட்டார்.

அப்போது தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், 'அரசியல் உள்நோக்கத்துடன் இந்த பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது' என வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி, 'இந்த விவகாரம் ஏற்கனவே 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு உள்ளதால், புதிதாக முன்வைக்கப்படும் முன்மொழிவுகளையும் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விரைந்து விசாரிக்க பட்டியலிட வேண்டும்' என்று உத்தரவிட்டார்.


Next Story