2021-22 நிதியாண்டில் பெட்ரோல் விலை 78 முறையும், டீசல் விலை 76 முறையும் உயர்த்தப்பட்டுள்ளது: மத்திய அரசு


2021-22 நிதியாண்டில் பெட்ரோல் விலை 78 முறையும், டீசல் விலை 76 முறையும் உயர்த்தப்பட்டுள்ளது: மத்திய அரசு
x

image credit: ndtv.com

தினத்தந்தி 25 July 2022 9:09 PM IST (Updated: 25 July 2022 9:24 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் 2021-2022 நிதியாண்டில் பெட்ரோல் விலை 78 முறையும், டீசல் விலை 76 முறையும் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் 2021-2022 நிதியாண்டில் பெட்ரோல் விலை 78 முறையும், டீசல் விலை 76 முறையும் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஆம் ஆத்மி எம்பி ராகவ் சாதாவின் கேள்விக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறை இணையமைச்சர் ராமேஸ்வர் டெலி எழுத்துப்பூர்வ பதிலை ராஜ்யசபாவில் தாக்கல் செய்தார்.

இந்த தகவலை டுவீட்டரில் பகிர்ந்த ராகவ், "ராஜ்யசபாவில் எனது கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு, கடந்த ஓராண்டில் முறையே 78 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை 76 முறை உயர்த்தப்பட்டுள்ளது. இது சாமானியர்களை கொள்ளையடிக்கும் அரசின் தெளிவான வாக்குமூலம் என்று கூறினார்.


Next Story