ஆந்திராவில் மருந்து தொழிற்சாலையில் தீ விபத்து - பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு


ஆந்திராவில் மருந்து தொழிற்சாலையில் தீ விபத்து -  பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு
x

தீ விபத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக அனகாப்பள்ளி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்

அனகாபள்ளி,

ஆந்திர மாநிலம், அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள அச்சுதாபுரம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள மருந்து தொழிற்சாலையில் இன்று சுமார் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மதிய உணவு நேரத்தின் போது மருந்து தொழிற்சாலையில் உள்ள ரியாக்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து அருகில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்தன.

திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக அனகாப்பள்ளி மாவட்ட கலெக்டர் விஜய கிருஷ்னன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 20 க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் , இந்த விபத்தில் உயிரிழந்து தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசு துணை நிற்கும் என்றும் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உறுதியளித்துள்ளார்.


Next Story