டெல்லியில் குழாய்வழியாக வீட்டுக்கு வினியோகிக்கும் சமையல் கியாஸ் விலை உயர்வு
டெல்லியில், குழாய் வழியாக வீடுகளின் சமையலறைக்கு சமையல் கியாஸ் வினியோகிக்கும் பணியை இந்திரபிரஸ்தா கியாஸ் லிமிடெட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில், குழாய் வழியாக வீடுகளின் சமையலறைக்கு சமையல் கியாஸ் வினியோகிக்கும் பணியை இந்திரபிரஸ்தா கியாஸ் லிமிடெட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவனம், டெல்லி மற்றும் சுற்றுப்புற நகரங்களில் குழாய் வழியாக வினியோகிக்கும் சமையல் கியாஸ் விலையை நேற்று யூனிட்டுக்கு ரூ.2.63 வீதம் உயர்த்தியது. அதனால், ஸ்டாண்டர்டு கன மீட்டருக்கு ரூ.47.96 ஆக இருந்த அதன் விலை, ரூ.50.59 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 26-ந் தேதிதான், இதன் விலை ரூ.2.10 உயர்த்தப்பட்டது. 2 வாரம் முடிவதற்குள் 2-வது தடவையாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story