விஜயதசமிக்கு வைத்த பேனர் கிழிப்பு; கோஷ்டி மோதல்


விஜயதசமிக்கு வைத்த பேனர் கிழிப்பு; கோஷ்டி மோதல்
x
தினத்தந்தி 8 Oct 2022 12:45 AM IST (Updated: 8 Oct 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

பசவனஹள்ளி அருகே விஜயதசமிக்கு வைத்த பேனரை கிழித்ததால் இருத்தரப்பினர் இடையே மோதல் உண்டானது.

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு டவுன் பசவனஹள்ளி அரவிந்த் நகர் பகுதியில் விஜயதசமியையொட்டி துர்கா சிலை ஊர்வலம் நடந்தது. இதற்காக அந்தப்பகுதியை சேர்ந்த பா.ஜனதா கவுன்சிலர் ராஜசேகர் படத்துடன் பேனர் வைக்கப்பட்டிருந்தது.

அந்த பேனரில் மற்றொரு தரப்பினாின் படம் வைக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில், அந்த பேனரை மற்றொரு தரப்பினர் கிழித்தனர். இதனால் அந்தப்பகுதியில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

அவர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கினார்கள். இதில் அந்தப்பகுதியை சேர்ந்த ஆதர்ஷ் (வயது 22) என்பவர் பலத்த காயம் அடைந்தார். அவர் சிக்கமகளூரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பசவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story