கேரள முதல்-மந்திரியின் பாதுகாப்புக்காக ரூ.33 லட்சத்தில் புதிய கார் வாங்க திட்டம்
பினராயி விஜயன் கான்வாய்க்கு புதிய கார் வாங்க, ரூ.33 லட்சம் செலவிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள முதல்-மந்திரியாக பினராயி விஜயனுக்கு பாதுகாப்பை பலப்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே மாநில காவல்துறைத் தலைவர் அனில்காந்த், முதல்-மந்திரியின் வாகனத்தில் புதிய காரை சேர்க்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தார்.
இதையடுத்து கடந்த 24 ஆம் தேதி கேரளாவின் உள்துறை செயலாளர் அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து பினராயி விஜயன் கான்வாய்க்கு புதிய கார் வாங்க, ரூ.33 லட்சம் செலவிட முடிவு செய்யப்பட்டு உள்ளது. 6 மாதங்களுக்கு முன்பு புதிய கருப்பு நிற இன்னோவா கிரிஸ்டா கார்களை அரசு வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story