நாடாளுமன்றத்தில் இன்று முக்கிய மசோதா நிறைவேற்ற திட்டம்


நாடாளுமன்றத்தில் இன்று முக்கிய மசோதா நிறைவேற்ற திட்டம்
x
தினத்தந்தி 10 Feb 2024 5:30 AM IST (Updated: 10 Feb 2024 5:30 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பா.ஜனதா எம்.பி.க்கள் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முடிவடைகிறது.இதையொட்டி, இன்று மிக முக்கியமான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், இன்றே விவாதித்து நிறைவேற்றப்படும் என்றும் பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.எனவே, இரு அவைகளிலும் இன்று தவறாமல் ஆஜராகுமாறு பா.ஜனதா எம்.பி.க்கள் அனைவருக்கும் 'கொறடா' உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. என்ன மசோதா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், அயோத்தி ராமர் கோவில் தொடர்பானதாக இருக்கலாம் என்று பேசப்படுகிறது.

1 More update

Next Story