பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.21,000 கோடி நிதியுதவி!


இந்தத் திட்டத்தின் கீழ், 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் ரூ.21,000 கோடி மதிப்பிலான நிதிப் பலன்களைப் பெறுவார்கள்.

புதுடெல்லி,

பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் 11வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி நாளை வெளியிடுவார் என்று வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி நாளை இமாசலப்பிரதேசத்தின் சிம்லாவுக்கு செல்லவிருக்கிறார். அங்கு காலை 11 மணிக்கு 'ஏழைகள் நல மாநாட்டில்' பிரதமர் பங்கேற்பார். பிரதமர் தலைமையிலான அரசின் எட்டு ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் இந்தப் புதுமையான பொதுமக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நாடு முழுவதும் உள்ள மாநில தலைநகர்கள், மாவட்ட தலைமையிடங்கள், விவசாய அறிவியல் மையங்கள் ஆகியவற்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் ரூ.21,000 கோடி மதிப்பிலான நிதிப் பலன்களைப் பெறுவார்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் விவசாய கவுரவிப்பு நிதித் திட்டத்தின் கீழ், 11-வது தவணை நிதிப்பயனையும் பிரதமர் வெளியிடுவார். இதன் மூலம் 10 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு ரூ.21,000 கோடி நேரடி பரிமாற்றம் செய்யப்படும். இந்த நிகழ்ச்சியின் போது நாடு முழுவதும் உள்ள (பிஎம்-கிசான்) பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story