மணிப்பூர் குறித்த தனது கருத்துகளில் பிரதமர் மோடி அரசியலை கலந்துள்ளார் - பிரியங்கா தாக்கு


மணிப்பூர் குறித்த தனது கருத்துகளில் பிரதமர் மோடி அரசியலை கலந்துள்ளார் - பிரியங்கா தாக்கு
x

மத்தியப் பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அந்த மாநிலத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

குவாலியர்,

மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலைச் சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் இந்த மாநிலத்தில் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானுக்கும், கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவைப் போல் மத்தியப் பிரதேசத்திலும் பா.ஜ.க.வை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்ற திட்டமிட்டு உள்ளது.

இந்த சூழலில் காங்கிரசின் செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் நோக்கில் பிரியங்கா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

"மணிப்பூர் 2 மாதங்களாக எரிந்தது, வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது, பெண்கள் சித்திரவதை செய்யப்பட்டனர், குழந்தைகளுக்குக் கூரை இல்லை, 77 நாட்களாகப் பிரதமர் மோடி எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை. ஒரு திகிலூட்டும் வீடியோ வரலாகப் பரவி, நிர்ப்பந்தத்தால் நேற்று பேசினார்" என்றார். அதனைத் தொடர்ந்து மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவின் சொந்த ஊரான குவாலியர்-சம்பல் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பிரியங்கா பங்கேற்றுப் பேசினார்.


Next Story