பிரேசிலில் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து தாக்குதல்: ஆழ்ந்த கவலை அளிக்கிறது - பிரதமர் மோடி
பிரேசிலில் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது ஆழ்ந்த கவலை அளிக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் காங்கிரஸ் கட்டிடம், உச்சநீதிமன்றம் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து டுவீட் செய்துள்ள பிரதமர் மோடி
"பிரேசிலியாவில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு எதிரான கலவரம் மற்றும் நாசவேலைகள் பற்றிய செய்திகள் குறித்து ஆழ்ந்த கவலை அளிக்கிறது . ஜனநாயக மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும். பிரேசில் அதிகாரிகளுக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்குகிறோம் என பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story