ராஜஸ்தானில் ஸ்ரீநாத்ஜி கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்


ராஜஸ்தானில் ஸ்ரீநாத்ஜி கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
x

ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.

ஜெய்ப்பூர்,

பிரதமர் மோடி நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ராஜ்சமந்த் மாவட்டம் நாதத்வாரா நகரில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்தார். அப்போது, சில அர்ச்சகர்களும், வேதம் படிக்கும் மாணவர்களும் வேத மந்திரங்களை வாசித்தனர். அந்த மாணவர்களுக்கு தட்சணையாக பிரதமர் பிரசாதம் வழங்கினார்.

கோவில் நிர்வாகிகள், பிரதமர் மோடிக்கு தலைப்பாகை ஒன்றை வழங்கினர். முன்னதாக, கோவிலுக்கு செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் நின்று பொதுமக்கள் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.


Next Story