பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் குறித்து பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும் - ராகுல் காந்தி


பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் குறித்து பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும் - ராகுல் காந்தி
x

கோப்புப்படம்

நாட்டில் பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக உள்ளது ஏன்? என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமைக்கான யாத்திரை என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 7-ந்தேதி தமிழ்நாடு கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கிய அவர், கேரளாவை தொடர்ந்து தற்போது கர்நாடகத்தில் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், நாட்டில் பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக உள்ளது ஏன் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

" 35 ஆண்டுகளில் பணவீக்கம் அதிகமாக உள்ளது ஏன்?

45 ஆண்டுகளில் வேலையின்மை அதிகமாக உள்ளது ஏன்?

பரோட்டாக்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவது ஏன்?

விவசாய டிராக்டர்களுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவது ஏன்?

பிரதமர் அவர்களே, பாரத் ஜோடோ யாத்திரை இந்தக் கேள்விகளையும் இன்னும் பல கேள்விகளையும் உங்களிடம் கேட்கும். இதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்" இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story