5 நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்


5 நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
x

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 11-ந் தேதி பெங்களூருவுக்கு வருகை தர உள்ளார். அன்றைய தினம் கெம்பேகவுடா சிலை திறப்பு உள்ளிட்ட 5 நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.

பெங்களூரு:-

வருகிற 11-ந் தேதி பிரதமர் வருகை

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் வளாகத்தில் 108 அடி உயரத்திற்கு கெம்பேகவுடாவின் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா வருகிற 11-ந் தேதி நடைபெறும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிலை திறப்பு விழா பணிகளை மந்திரி அஸ்வத் நாராயண் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டு ஆய்வு வருகிறார்கள்.

விமான நிலையத்தில் அமைக்கப்பட்டு கெம்பேகவுடா வெண்கல சிலையை திறக்க பிரதமர் நரேந்திர மோடி வருகிற 11-ந் தேதி பெங்களூருவுக்கு வருகை தர உள்ளார். கர்நாடகத்தில் இன்னும் 6 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், கெம்பேகவுடா சிலை திறப்பு தவிர வேறு சில நிகழ்ச்சிகளிலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். அதாவது ஒட்டு மொத்தமாக 5 நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க இருப்பது தெரியவந்துள்ளது.

வந்தே பாரத் ரெயில் தொடக்கம்

அதன்படி, வருகிற 11-ந் தேதி கெம்பேகவுடா சிலையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி, விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 2-வது விமான நிலைய முனையத்தையும் திறந்து வைக்க உள்ளார். அதன்பிறகு, விமான நிலையம் அருகே அமைக்கப்பட்டு இருக்கும் தீம் பார்க்கை (நீர்சாகச கேளிக்கை பூங்கா) திறந்து வைத்து, அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும்

பிரதமர் பேச இருக்கிறார். அத்துடன் வருகிற 11-ந் தேதி கனகதாச ஜெயந்தி விழா ஆகும். இதையடுத்து, கனகதாச ஜெயந்தி விழாவில் பங்கேற்று, அவரது சிலைக்கு மாலை அணிவித்து பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்த உள்ளார். அதன்பிறகு,பெங்களூரு சங்கொள்ளி ராயண்ணா (சிட்டி) ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை-மைசூரு இடையிலான வந்தே பாரத் ரெயில் திட்டத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். இதையொட்டி பிரதமர் மோடி பங்கேற்க உள்ள விழா ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் பெங்களூருவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Related Tags :
Next Story