கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி கிராமப்புற இந்தியாவின் வளர்ச்சிக்காக உழைத்துள்ளார் - அமித் ஷா


கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி கிராமப்புற இந்தியாவின் வளர்ச்சிக்காக உழைத்துள்ளார் - அமித் ஷா
x

Image Courtesy : ANI 

கிராமங்களின் வளர்ச்சியில் பாஜக அரசு அதிக கவனம் செலுத்தி உள்ளதாக அமித் ஷா தெரிவித்தார்.

காந்திநகர்,

குஜராத்தில் இன்று நடைபெற்ற ஊரக மேலாண்மை நிறுவனத்தின் 41வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் முன்னெடுக்கப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசினார். மேலும் கடந்த 8 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் ஏற்பட்ட மாற்றங்களை பட்டியலிட்டார்.

இந்த விழாவில் உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது :

கடந்த எட்டு ஆண்டுகளில் கிராமப்புற இந்தியாவின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி உழைத்துள்ளார். நாட்டின் கிராமப்புறங்கள் வளர்ச்சியடைந்தால், நாடு வளர்ச்சி அடையும் என்று மகாத்மா காந்தி கூறினார். அதையே மோடி அரசு செய்கிறது.

கிராமங்களில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பமும் சுகாதார வசதிகள், எரிவாயு சிலிண்டர் மற்றும் சுகாதார காப்பீடு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மோடி அரசு கிராமங்களுக்கு வசதிகள் மற்றும் இணைப்புகளை வழங்கியது. கிராமங்களில் சாலை உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

கிராமப்புற வளர்ச்சியின் அம்சம் கிராமங்களை வசதியாக மாற்றுவதாகும். இதற்கு, கிராமங்களுக்கு தொலைதூர இணைப்பு அவசியம். கிராமத்தில் மின்சாரம் இல்லை, நாங்கள் அதை அவர்களுக்கு வழங்கினோம். எங்கள் அரசு கிராமங்களின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்துகிறது. இதனால் கிராமங்களும் இன்று தன்னம்பிக்கையை நோக்கி முன்னேறி வருகின்றன.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.


Next Story