பாஜகவால் மக்களின் வலியை உணர முடியாது - ராகுல் காந்தி


பாஜகவால் மக்களின் வலியை உணர முடியாது  - ராகுல் காந்தி
x

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் பிரதமராக நரேந்திர மோடி இருக்கிறார் என ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

புதுடெல்லி,

காங். மூத்த தலைவர் ராகுல்காந்தி வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது:-

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கும் பிரதமர் மோடிக்கும் எந்த தொடர்பும் இல்லை, ஏனெனில் அவர் ஒரு சிலரின் பிரதமர், அனைவருக்கும் இல்லை.

நாட்டின் பிரதமர் ஏன் மணிப்பூருக்குச் சென்று அதைப் பற்றி பேசவில்லை என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்தியர்கள் காயப்படும்போதெல்லாம், அவர்களின் வலியை நம்மால் உணர முடியும் ஆனால் பாஜகவினரும், ஆர்.எஸ்.எஸ் -ம் அந்த வலியை உணரமாட்டார்கள்.

பதவியை பெறுவதற்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் எதுவேண்டுமானாலும் செய்யும். பதவிக்காக மணிப்பூரை மட்டுமல்ல, இந்த உலகத்தையும் அழிப்பார்கள். நாட்டில் ஏற்பட்டுள்ள துயரம் மற்றும் வலியைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லை என்றார்.

1 More update

Next Story