குஜராத்: கேவாடியாவில் 'மிஷன் லைப்' திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
இன்று கேவாடியாவில் சுற்றுச்சூழல் தொடர்பான வாழ்க்கை முறை குறித்த கருத்தரங்கை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
ஆமதாபாத்,
பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 19ஆம் தேதி முதல் இரண்டு நாள் பயணமாக குஜராத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
குஜராத் மாநிலம் கேவாடியாவில் 'மிஷன் லைப்' என்ற சுற்றுச்சூழல் தொடர்பான வாழ்க்கை முறை குறித்த கருத்தரங்கை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெசும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்.
இன்று காலை 9.45 மணிக்கு கேவாடியாவில் சுற்றுச்சூழல் தொடர்பான வாழ்க்கை முறை குறித்த கருத்தரங்கை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.பிற்பகல் 3.45 மணியளவில் வியாராவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.மேலும், தபியில் ரூ.1,970 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.
Related Tags :
Next Story