சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திக்கொன்ற செல்போன் திருடன்


சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திக்கொன்ற செல்போன் திருடன்
x

தனது கணவரின் செல்போனை திருடிவிட்டு மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

டெல்லி,

தலைநகர் டெல்லியின் மயபுரி பகுதியை சேர்ந்த பெண் கடந்த புதன்கிழமை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், அனிஷ் என்ற நபர் தனது கணவரின் செல்போனை திருடிவிட்டு மிரட்டுவதாக போலீசில் புகார் அளிதார்.

இந்த புகாரையடுத்து உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஷம்பு தயல் (வயது 57) சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்போன் திருடிய அனிஷை கைது செய்தார்.

கைது செய்யப்பட்ட அனிஷை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தபோது அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஷம்பு தயலின் கழுத்து உள்பட உடலின் பல பாகங்களில் சரமாரியாக குத்தினார்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த உதவி சப் இன்ஸ்பெக்டர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஷம்பு தயல் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உதவி சப்-இன்ஸ்பெக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தி கொலை செய்த அனிஷ் மீது கொலைவழக்குப்பதிவு செய்யபட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story