போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் மகள் தற்கொலை


போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் மகள் தற்கொலை
x

மைசூருவில் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் மகள் தற்கொலை செய்து கொண்டார்.

மைசூரு:

மைசூரு நகர் நஜர்பாத் போலீஸ் எல்லைக்குட்பட்ட ஜலப்பூரி பகுதியில் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் கோபிநாத். இவர் ைமசூரு நகரில் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் கிரிஜாலட்சுமி (வயது 19). இவர் மைசூருவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கிரிஜாலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது திடீரென்று வீட்டுக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில், ெவளியே சென்றிருந்த கோபிநாத் மற்றும் அவரது மனைவி வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது கிரிஜாலட்சுமி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் நஜர்பாத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், கிரிஜாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவருடைய தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து நஜர்பாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story