இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்த சிவன் கோவில்களை இந்துக்களிடம் ஒப்படைக்க பிரமோத் முத்தாலிக் வலியுறுத்தல்


இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்த சிவன் கோவில்களை இந்துக்களிடம் ஒப்படைக்க பிரமோத் முத்தாலிக் வலியுறுத்தல்
x

இந்து கோவில்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பிரமோத் முத்தாலிக் வலியுறுத்தி உள்ளார்.

சிக்கமகளூரு

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா டவுன் பகுதியில் புதிதாக ஆஞ்சநேயர் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் ஸ்ரீராமசேனையின் தலைவர் பிரமோத் முத்தாலிக் கலந்து கொண்டு கோவிலை திறந்து வைத்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-


உத்தரபிரதேச மாநிலம் ஞானபாத்தியில் உள்ள மசூதியில் 12 ஜோதி சிவலிங்கங்கள் உள்ளது. இந்த ஜோதி லிங்கம் அவுரங்கசிப் காலத்தில் அமைக்கப்பட்டது. அவர் கோவிலை ஆக்கிரமித்து மசூதியாக மாற்றிவிட்டார். எனவே இந்த மசூதியை இந்துக்களிடம் ஒப்படைக்கவேண்டும். அங்கு ஒரு இந்து கோவில் கட்டப்படவேண்டும்.


இதேபோன்று இந்தியாவில் 192 சிவன் கோவில்களை இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அதை இந்துக்களிடம் ஒப்படைக்கவேண்டும். அயோத்தி போன்று மீண்டும் மாற்றி அமைக்கவேண்டும். ஒரு வேலை இந்துக்களிடம் ஒப்படைக்கவில்லை என்றால் ஸ்ரீராமசேனை அமைப்பினர் தரப்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story